ADDED : ஜூலை 25, 2024 04:24 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் முத்தையா மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேலைவாய்ப்பு முகாம், கல்வியாண்டு புதிய மாணவர்கள் பயிற்சி துவக்க விழா நடந்தது. தாளாளர் காசிநாதன் தலைமை வகித்தார். முதல்வர் எஸ்.என்.வெங்கடேசன் வரவேற்றார்.
ஓட்டல்கள், நிறுவனங்களின் மேலாளர்கள், நிர்வாகிகள் வேலை வாய்ப்பு குறித்து விளக்கினர். 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வான மாணவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருப்புத்துார் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகரன் நன்றி கூறினார்.