ADDED : ஜூலை 22, 2024 05:04 AM

மானாமதுரை: மானாமதுரையில் பசுமை பணி குழு சார்பில் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் துவக்கி வைத்தார். நடிகர் தாமு மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்தார். மானாமதுரை நகரில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நட்டு வைத்தனர். தாசில்தார் கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி., கண்ணன், பள்ளி தாளாளர்கள் கிறிஸ்டிராஜ், பூமிநாதன், சாமுவேல், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நம்பிராஜன், பாலமுருகன் ஏற்பாட்டை செய்திருந்தனர்.