/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி அருங்காட்சியகம் காண வந்த துாதரக ஊழியர்கள், குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகம் காண வந்த துாதரக ஊழியர்கள், குடும்பத்தினர்
கீழடி அருங்காட்சியகம் காண வந்த துாதரக ஊழியர்கள், குடும்பத்தினர்
கீழடி அருங்காட்சியகம் காண வந்த துாதரக ஊழியர்கள், குடும்பத்தினர்
கீழடி அருங்காட்சியகம் காண வந்த துாதரக ஊழியர்கள், குடும்பத்தினர்
ADDED : ஜூன் 20, 2024 04:47 AM

கீழடி: கீழடி அருங்காட்சியகத்தை நேற்று ஆஸ்திரேலியா, டென்மார்க், கொரியா, பிலிப்பைன்ஸ், தைவான், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளின் துாதரகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் வந்தனர்.
கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையினரின் அகழாய்வின் மூலம் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய சுடுமண் பானை, தங்க காதணி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட சீப்பு, சூதுபவளம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 ஆயிரத்து 834 பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து தமிழக தொல்லியல் துறை காட்சிப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்தும் பார்வையாளர்கள் தினசரி அருங்காட்சியகத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, டென்மார்க் உள்ளிட்ட பத்து நாடுகளின் துாதரகங்களில் பணியாற்றுபவர்கள், அவர்களின் குடும்பத்தினர் 22 பேர் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். கீழடி குறித்த ஆவணப்படமும் அவர்களுக்காக திரையிட்டு காட்டப்பட்டது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து கீழடி அகழாய்வின் இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜித் விளக்கமளித்தனர். முன்னதாக அருங்காட்சியகத்திற்கு வந்தவர்களுக்கு கீழடி பற்றி பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.