/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ துாங்கிய ரேஷன் கடை ஊழியர்; காத்திருந்து திரும்பிய மக்கள் துாங்கிய ரேஷன் கடை ஊழியர்; காத்திருந்து திரும்பிய மக்கள்
துாங்கிய ரேஷன் கடை ஊழியர்; காத்திருந்து திரும்பிய மக்கள்
துாங்கிய ரேஷன் கடை ஊழியர்; காத்திருந்து திரும்பிய மக்கள்
துாங்கிய ரேஷன் கடை ஊழியர்; காத்திருந்து திரும்பிய மக்கள்
ADDED : ஜூலை 29, 2024 11:28 PM

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சொர்ணநாதன் வீதியில் அமுதம் 10 ம் எண் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதில் நித்தியராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை 11:00 மணியளவில் கடைக்கு வந்த நித்தியராஜ் சிறிது நேரத்தில் , கதவை இறக்கி விட்டு மூடை மீது படுத்து துாங்கினார். ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள் தவித்தனர். தகவல் அறிந்து வந்த அந்தப் பகுதி கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அலுவலகத்தில் இருந்து வந்த அலுவலர் எழுப்பியபோதும் எழுந்திருக்கவில்லை.
இது குறித்து அ.ம.மு.க., வட்ட செயலாளர் நல்லுபாண்டி கூறுகையில், இந்த கடை பணியாளர் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் ஆபாசமாக பேசுவது வழக்கம். இரண்டு முறை பிரச்னை ஏற்பட்டு உள்ளது. தற்போது கடையில் படுத்து கிடக்கிறார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.