/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சாலை மறியல் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சாலை மறியல்
தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சாலை மறியல்
தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சாலை மறியல்
தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சாலை மறியல்
ADDED : ஜூன் 23, 2024 04:02 AM

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய இறப்புகளை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து பா.ஜ,வினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.
நகர் தலைவர் உதயா, மாவட்ட பொது செயலாளர் நாகராஜன், மார்த்தாண்டன், தேசிய பொதுக்குழு சொக்கலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் கந்தசாமி, சங்கரசுப்பிரமணியன், நகர் பொது செயலாளர் பாலா, ஒன்றிய தலைவர்கள் மயில்சாமி, நாட்டரசு, லோகு, முத்துமுனியாண்டி, காரைக்குடி பாண்டி, விவசாய அணி மாவட்ட தலைவர் சசிகுமார், விவசாய அணி மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட தேசிய, மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 108 ஆண்கள் 5 பெண்கள் உட்பட 113 பேரை போலீசார் கைது செய்தனர்.