/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காளையார்கோவிலில் வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததால் போராட்டம் தி.மு.க., கவுன்சிலர்களும் பங்கேற்பு காளையார்கோவிலில் வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததால் போராட்டம் தி.மு.க., கவுன்சிலர்களும் பங்கேற்பு
காளையார்கோவிலில் வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததால் போராட்டம் தி.மு.க., கவுன்சிலர்களும் பங்கேற்பு
காளையார்கோவிலில் வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததால் போராட்டம் தி.மு.க., கவுன்சிலர்களும் பங்கேற்பு
காளையார்கோவிலில் வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததால் போராட்டம் தி.மு.க., கவுன்சிலர்களும் பங்கேற்பு
ADDED : ஜூலை 12, 2024 04:29 AM

சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காத அதிகாரிகளை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,), துணை தலைவர் ராஜா (பா.ஜ.,) உட்பட அ.தி.மு.க., தி.மு.க.,பா.ஜ., தமிழ் மாநில காங்., கவுன்சிலர்கள் உள்ளனர். ஜூன் 26 அன்று ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் தலைமையில் துவங்கியது.
அக்கூட்டத்தில் அலுவலக செலவினமாக ரூ.84 லட்சத்திற்கு மட்டுமே தீர்மானம் வைத்திருந்தனர். அதிருப்தியான ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் உட்பட 17 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அன்றைய தினம் அதிகாரிகளை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி விட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர். கவுன்சில் கூட்டம் நடத்தப்படாமல், தீர்மானத்திலும் கவுன்சிலர்கள் கையெழுத்திடவில்லை. இச்சம்பவத்திற்கு பின் 15 நாட்கள் ஆனநிலையிலும் பி.டி.ஓ., உமாராணி உள்ளிட்ட அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
இதில் அதிருப்தியான ஒன்றிய கவுன்சிலர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் உதவி இயக்குனர் (தணிக்கை) ரவி, பி.டி.ஓ., உமாராணி, (ஊராட்சி) பி.டி.ஓ., பழனியம்மாள் உள்ளிட்டோரை நுழைய விடாமல் உண்ணாவிரத போராட்டத்தை அலுவலக வாசலில் தொடங்கினர். அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய தலைவர், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகவில்லை.
இதையடுத்து அதிகாரிகள் அலுவலகத்திற்குள் சென்று விட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும் ஒன்றிய தலைவர், துணை தலைவர் ஆகியோர் தலைமையில் பா.ஜ., - அ.தி.மு.க.,- தி.மு.க.,- தமிழ்மாநில காங்., கவுன்சிலர்கள் 16 பேர் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். காளையார்கோவில் எஸ்.ஐ.,திருமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
ஒன்றிய கவுன்சிலர்கள் அவமதிப்பு
ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி (அ.தி.மு.க.,) கூறியதாவது:
கடந்த மாதம் 26ம் தேதி நடந்த கவுன்சில் கூட்டத்திலேயே செலவினத்திற்காக மட்டுமே ரூ.84 லட்சத்திற்கு தீர்மானம் போட்டுள்ளீர்கள். வளர்ச்சி பணிக்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை என கேட்டோம். தொடர்ந்து அதிகாரிகள், கவுன்சிலர்களை கண்டு கொள்ளாமல் அவமதித்து வந்தனர்.
இதை கண்டித்து தான் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம். இதற்கு தீர்வு எட்டாவிடில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.