/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்பாச்சேத்தியில் உறை கிணறு கண்டுபிடிப்பு திருப்பாச்சேத்தியில் உறை கிணறு கண்டுபிடிப்பு
திருப்பாச்சேத்தியில் உறை கிணறு கண்டுபிடிப்பு
திருப்பாச்சேத்தியில் உறை கிணறு கண்டுபிடிப்பு
திருப்பாச்சேத்தியில் உறை கிணறு கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 23, 2024 09:34 PM

திருப்பாச்சேத்தி:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் அருகே 100 நாள் திட்ட பணியின் போது சுடுமண்ணால் செய்யப்பட்ட உறை கிணறு வெளிப்பட்டது.
இக்கண்மாய் அருகே 50 ஏக்கர் பரப்பளவில் ஊருணி இருந்துள்ளது. காலப்போக்கில் பலரும் ஆக்கிரமித்து விவசாயம் செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு கண்மாய், நீர்நிலைகளை மீட்டு வரும் நிலையில் ஊருணியும் மீட்கப்பட்டது.
கடந்தாண்டு மார்ச்சில் மூன்று அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டெடுக்கப்பட்டு தமிழக தொல்லியல் துறையினரும் ஆய்வு செய்தனர். தற்போது 100 நாள் திட்டப்பணியின் போது மீண்டும் ஒரு உறை கிணறும் அருகிலேயே வட்டச்சில்லு உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. சிவகங்கை தொல்லியல் துறையினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது:
கீழடியை போன்று திருப்பாச்சேத்தி பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் மேற்கொண்டு பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.