/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிதைகிறது தேவகோட்டையில் பேவர் பிளாக் ரோடுகள் தரமில்லாத பணியால் பல லட்சம் வீணானது சிதைகிறது தேவகோட்டையில் பேவர் பிளாக் ரோடுகள் தரமில்லாத பணியால் பல லட்சம் வீணானது
சிதைகிறது தேவகோட்டையில் பேவர் பிளாக் ரோடுகள் தரமில்லாத பணியால் பல லட்சம் வீணானது
சிதைகிறது தேவகோட்டையில் பேவர் பிளாக் ரோடுகள் தரமில்லாத பணியால் பல லட்சம் வீணானது
சிதைகிறது தேவகோட்டையில் பேவர் பிளாக் ரோடுகள் தரமில்லாத பணியால் பல லட்சம் வீணானது
ADDED : ஜூன் 13, 2024 06:13 AM

தேவகோட்டை: பேவர் பிளாக் கற்களால் அமைக்கப்படும் ரோடு பணி தரமில்லாததால் சில நாட்களிலேயே சேதமடைந்து போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.
தேவகோட்டையில் பல கோடி ரூபாய்க்கு தார் ரோடு அமைக்கும் பணி நடந்தது. குறுகலான வீதிகளில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது சிமென்ட் சாலைக்கு பதிலாக குறுகலான ரோடுகளில் பேவர் பிளாக் எனப்படும் சிமென்ட் கற்கள் பதித்து ரோடு அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே பல இடங்களில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்களாலான ரோடுகள் அனைத்தும் பணால் ஆகி விட்டன. ஒன்று கூட உருப்படியாக இல்லை. பல இடங்களில் குறுகலான வீதி என்பதால் கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக மாறிவிட்டது.
இந்த பேவர் பிளாக்கற்களால் அமைக்கப்படும் ரோட்டில் மழைநீர் முற்றிலும் உடனடியாக உறிஞ்சிப்படும். ரோட்டில் தண்ணீர் தேங்காது, ரோடும் பாதிக்கப்படாது என்று கூறினர். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
அதிகாரிகளின் சரியாக திட்டமிடாததாலும், சரியாக மேற்பார்வை இல்லாததாலும் ரோடு பணி செய்பவர்கள் முழுமையாக கவனம் செலுத்துவதில்லை. ஏதோ கடனுக்கு போடுகிறார்கள். வாகனங்கள் செல்லும் போது ரோட்டின் இருபுறமும் கால்வாய் இருப்பதால் கற்கள் சிதைந்து கால்வாயில் விழுந்து விடுகிறது. தடுப்பு சுவர் உடைந்து கால்வாயில் விழுந்து விடுவதால் கழிவுநீரும் செல்வதில்லை.
நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்பு சுவர் சேதமடையாமல் இருக்க மேற்கொள்ள வேண்டியதை ஆராய்ந்து அதற்கேற்ப தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். இல்லையேல் பேவர் பிளாக் கல்லால் அமைக்கும் பணியை தவிர்த்து தார் ரோடு அமைக்க வேண்டும்.