ADDED : ஜூன் 03, 2024 03:10 AM
மானாமதுரை: மானாமதுரையில் தென்னக ரயில்வே மஸ்துார் யூனியன் தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி தலைவர் இருளப்பன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் செயலாளர் சங்கரதாஸ், நிர்வாகிகள் விஜயேந்திரன், பால்ராஜ், மாரி, துரைப்பாண்டி, கணேசன் பங்கேற்றனர். 25 சதவீத அலவன்ஸ்களை ஜன., 1 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.