/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குழாய் பதிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர் திருப்புவனத்தில் துாய்மை பணி பாதிப்பு குழாய் பதிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர் திருப்புவனத்தில் துாய்மை பணி பாதிப்பு
குழாய் பதிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர் திருப்புவனத்தில் துாய்மை பணி பாதிப்பு
குழாய் பதிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர் திருப்புவனத்தில் துாய்மை பணி பாதிப்பு
குழாய் பதிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர் திருப்புவனத்தில் துாய்மை பணி பாதிப்பு
ADDED : ஜூலை 05, 2024 05:02 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்களை ஈடுபடுத்துவதால் நகரில் துாய்மை பணி பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
திருப்புவனத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில் 18 வார்டுகளிலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணிகள் நடந்து வருகின்றன. பல இடங்களிலும் பேவர் பிளாக் சாலை, சிமென்ட் சாலை, தார்ச்சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு குழாய் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளது.
தெருக்களில் நடக்கவே முடியவில்லை. குழாய் பதிப்பதற்காக பள்ளங்கள் இயந்திரம் மூலம் தோண்டப்படுவதால் சாக்கடை கால்வாய்களும் சேதமடைந்து வருகின்றன. நகரின் பல பகுதிகளிலும் குடிநீர் குழாய் பதிப்பு பணியில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
துாய்மை பணியாளர்கள் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் நகரில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் குப்பை அள்ளப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் குழாய் பதிக்கும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்துவதை தடுத்து ஒப்பந்தகாரர்கள் விரைந்து பணிகளை முடிக்க வலியுறுத்த வேண்டும்.
கால்வாய் சேதம்
அம்பலத்தாடி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் திட்டப்பணிக்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டது.
இயந்திரம் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டதால் அருகில் கட்டப்பட்ட சாக்கடை கால்வாய்களும் பல இடங்களில் சேதமடைந்தன. குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்த பின் சாக்கடை கால்வாய்களும் சரி செய்யப்படும் என ஒப்பந்தகாரர்கள் உறுதியளித்திருந்தனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் சரி செய்யப்படவில்லை, சேதமடைந்த சாக்கடை கால்வாய்களும் சரி செய்யப்படவில்லை. சாக்கடை வடிகால் சேதமடைந்ததால் தெருக்களில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள், சாக்கடை கால்வாய்களை சரி செய்ய வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.