Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பள்ளிக்கட்டடம் சேதம்: கவுன்சிலர் புகார்

பள்ளிக்கட்டடம் சேதம்: கவுன்சிலர் புகார்

பள்ளிக்கட்டடம் சேதம்: கவுன்சிலர் புகார்

பள்ளிக்கட்டடம் சேதம்: கவுன்சிலர் புகார்

ADDED : ஜூலை 18, 2024 11:44 PM


Google News
தேவகோட்டை:

தேவகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் (அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராசாத்தி (அ.தி.மு.க.,), ஒன்றிய கமிஷனர் பாலகிருஷ்ணன், பி.டி.ஓ. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மேலாளர் புவனேஸ்வர் வரவேற்றார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

தலைவர்: கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றியத்தில் அனைத்து பகுதியிலும் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேக்காரைக்குடி கிராமத்தில் ரோடு சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது சேதமடைந்துள்ளதாக புகார் வந்துள்ளது.

ரவி ( தி.மு.க.) : கடையனேந்தலில் புதிதாக பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு இன்னும் செயல்பாட்டுக்கு வராத நிலையில் கட்டடம் சேதமடைந்துள்ளது.

பொறியாளர்: நான் சென்று பார்த்த நிலையில் உடன் சரி செய்வதாக கான்ட்ராக்டர் கூறியுள்ளார். இன்னும் செய்யவில்லை. ஒப்பந்ததாரர் விரைவில் பணிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us