/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேசிய நெடுஞ்சாலையில் வழிகாட்டி போர்டு சேதம் தேசிய நெடுஞ்சாலையில் வழிகாட்டி போர்டு சேதம்
தேசிய நெடுஞ்சாலையில் வழிகாட்டி போர்டு சேதம்
தேசிய நெடுஞ்சாலையில் வழிகாட்டி போர்டு சேதம்
தேசிய நெடுஞ்சாலையில் வழிகாட்டி போர்டு சேதம்
ADDED : ஜூன் 14, 2024 04:55 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சேதமடைந்து விழுந்த வழிகாட்டும் கம்பங்களை மீண்டும் அமைக்காததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
திருப்புத்துார் நகருக்கு வெளியே திருமயம் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையின் இருவழிச்சாலையாக புறவழிச்சாலை செல்கிறது. அதில் என்.புதுார் முதல் நெடுமரம் பாலம் வரை விபத்து பகுதியாக உள்ளது. பாலம் ரோடு அளவிற்கு விரிவுபடுத்தப்படாமல் குறுகியதாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சில கி.மீ. தூரத்திற்கு ரோட்டோரத்தில் வாகன ஓட்டிகளுக்காக வைக்கப்பட்ட பல வழிகாட்டும் குறியீடுகளுடன் கூடிய கம்பங்கள் சேதமடைந்து சரிந்து கீழே விழுந்துள்ளன.
பல மாதங்களாகியும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அவற்றை சரி செய்து மீண்டும் நிறுவவில்லை. இதனால் மேலும் விபத்து அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.