/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மருத்துவமனை அருகே எரியும் குப்பையால் பாதிப்பு மருத்துவமனை அருகே எரியும் குப்பையால் பாதிப்பு
மருத்துவமனை அருகே எரியும் குப்பையால் பாதிப்பு
மருத்துவமனை அருகே எரியும் குப்பையால் பாதிப்பு
மருத்துவமனை அருகே எரியும் குப்பையால் பாதிப்பு
ADDED : ஜூலை 12, 2024 04:33 AM
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே எரிக்கப்படும் குப்பைகளால் மருத்துவர்கள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
இம்மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு மருத்துவர்கள் உள்ளிட்ட பல ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
மருத்துவமனை அருகேயுள்ள குடியிருப்புகளில் சேரும் குப்பை மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் அருகே கொட்டி எரிக்கப்படுகிறது. வெளியேறும் புகை மருத்துவமனை வளாகத்திற்குள் பரவி நோயாளிகள் பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டாமலும், எரிக்காமலும் இருக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.