ADDED : ஜூலை 12, 2024 04:26 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கத்தில் ஏ.சி.சி. அணியின் 10ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.
கல்லல் ஒன்றியம்வெளியாத்துார் விஷ்ணு துர்கை கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு போட்டிகள் நடந்தன. போட்டிகளை ராம.சண்முகம் துவக்கினார். 16 அணிகள்பங்கேற்றன. இறுதிப் போட்டியில் ஏ.சி.சி. அணி கோப்பையை வென்றது.
இரண்டாமிடத்தை பி.ஆர். அணி, மூன்றாமிடத்தை அ.சிறுவயல் அணி பெற்றன. சிறந்த பேட்ஸ்மேனாக சரவணன், சிறந்த பந்து வீச்சாளராக வினோத், சிறந்த ஆல் ரவுண்டராக தினேஷ் பரிசு பெற்றனர்.