/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மயானத்திற்கு செல்ல பாலம் அமைக்கும் பணி மயானத்திற்கு செல்ல பாலம் அமைக்கும் பணி
மயானத்திற்கு செல்ல பாலம் அமைக்கும் பணி
மயானத்திற்கு செல்ல பாலம் அமைக்கும் பணி
மயானத்திற்கு செல்ல பாலம் அமைக்கும் பணி
ADDED : ஜூன் 06, 2024 05:18 AM

காரைக்குடி : காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா அருகே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயானத்திற்கு செல்ல ரூ.31 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியின் ஒரு பகுதி தேவகோட்டை ரஸ்தா அருகே உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள காதிநகர் பகுதி மக்கள், இறந்தவர்களை அடக்கம் செய்ய அமராவதி கால்வாய் அருகே உள்ள மயானத்தை பயன்படுத்தி வந்தனர்.
மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் இருப்பதால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. இதுகுறித்து, பொதுமக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். இப்பிரச்னை குறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தற்போது, சாக்கோட்டை யூனியன் சார்பில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கால்வாயின் நடுவே பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலப்பணியை துரிதமாகவும் செய்து முடிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.