/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் சட்டம் ஒழுங்கை காக்க ஏழே மாதத்தில் 19 பேர் மீது 'குண்டாஸ்' கலெக்டர் ஆஷா அஜித் பரிந்துரை சிவகங்கையில் சட்டம் ஒழுங்கை காக்க ஏழே மாதத்தில் 19 பேர் மீது 'குண்டாஸ்' கலெக்டர் ஆஷா அஜித் பரிந்துரை
சிவகங்கையில் சட்டம் ஒழுங்கை காக்க ஏழே மாதத்தில் 19 பேர் மீது 'குண்டாஸ்' கலெக்டர் ஆஷா அஜித் பரிந்துரை
சிவகங்கையில் சட்டம் ஒழுங்கை காக்க ஏழே மாதத்தில் 19 பேர் மீது 'குண்டாஸ்' கலெக்டர் ஆஷா அஜித் பரிந்துரை
சிவகங்கையில் சட்டம் ஒழுங்கை காக்க ஏழே மாதத்தில் 19 பேர் மீது 'குண்டாஸ்' கலெக்டர் ஆஷா அஜித் பரிந்துரை
ADDED : ஜூலை 11, 2024 05:07 AM
சிவகங்கை: மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை குண்டாசில்' சிறையில் தள்ளும் நடவடிக்கையில் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தீவிரம் காட்டி வருகிறார்.
மாவட்டத்தில் கஞ்சா, கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை, கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்சசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்களை குண்டாசில்' சிறையில் அடைத்து, அமைதி நிலவ செய்ய சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தீவிரம் காட்டி வருகிறார்.
2024 ம் ஆண்டில் ஜூன் வரை தொடர் கொள்ளை, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேரை குண்டாசில்' சிறையில் அடைக்க எஸ்.பி., பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜூன் இறுதியில் கொல்லங்குடியில் இரட்டை கொலை, தேவகோட்டை அருகே நாகாடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.3 கோடி நகை கொள்ளை முயற்சி, மானாமதுரை ஜீவா நகரில் பீரோவை உடைத்து 58 பவுன் கொள்ளை, திருமாஞ்சோலை, சிவகங்கை காமராஜர் காலனியில் வீடுகளில் நகை திருட்டு என திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.
தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கும் நோக்கில் ஜூலை 1 முதல் 10 ம் தேதி வரை மட்டுமே 10 பேர் என கடந்த 7 மாதத்தில் 19 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.