Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆழிமதுரை ஊராட்சிக்கு சிறந்த  ஊராட்சிக்கான விருது கலெக்டர் ஆஷா அஜித் வழங்கல்

ஆழிமதுரை ஊராட்சிக்கு சிறந்த  ஊராட்சிக்கான விருது கலெக்டர் ஆஷா அஜித் வழங்கல்

ஆழிமதுரை ஊராட்சிக்கு சிறந்த  ஊராட்சிக்கான விருது கலெக்டர் ஆஷா அஜித் வழங்கல்

ஆழிமதுரை ஊராட்சிக்கு சிறந்த  ஊராட்சிக்கான விருது கலெக்டர் ஆஷா அஜித் வழங்கல்

ADDED : ஜூலை 04, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த பெண் ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஆழிமதுரை ஊராட்சிக்கு கேடயம் மற்றும் சான்றினை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊராட்சி தலைவர்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கேசவதாசன் வரவேற்றார். மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 445 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், 254 ஊராட்சிகளில் பெண்களே தலைவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட அளவில் அரசின் திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்திய பெண் ஊராட்சி தலைவர்களுக்கு கேடயம், சான்று வழங்கினர்.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த இளையான்குடி ஒன்றியம் ஆழிமதுரை ஊராட்சி தலைவர் சுசிலா நாடிமுத்துவிற்கு பொன்னாடை போர்த்தியும்,கேடயம்,சான்று வழங்கி கலெக்டர் பாராட்டினார்.தொடர்ந்து சிவகங்கை ஒன்றியத்தில் அரசனுார் ஊராட்சி தலைவர் செல்வராணி, தமறாக்கி தெற்கு தலைவர் வள்ளிக்கொடி, காளையார்கோவில் ஒன்றியத்தில் மேலமருங்கூர் தலைவர் டி.மலர்கொடி, மானாமதுரை ஒன்றியத்தில் சிறுகுடி தலைவர் டி.பஞ்சவர்ணம், திருப்புத்துார் ஒன்றியத்தில் ஆலம்பட்டி தலைவர் திலகவதி, சிங்கம்புணரி ஒன்றியத்தில் மல்லாக்கோட்டை தலைவர் ஆர். விஜயா, சாக்கோட்டை ஒன்றியம் பி.முத்துப்பட்டினம் தலைவர் சி.மலர்மாணிக்கம், கல்லல் ஒன்றியம் தளக்காவூர் தலைவர் எம்.தமிழ்செல்வி, என்.வைரவன்பட்டி தலைவர் எம். ஜெகதாம்பாள் ஆகியோருக்கும் கேடயம், பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us