/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
ADDED : ஜூன் 19, 2024 02:05 AM

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் ஜூன் 21 ல் நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி., அருண், ஐ.ஜி., கண்ணன் ஆலோசனை செய்தனர்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் ஆனித்திருவிழா தொடங்கியது. ஆண்டுதோறும் ஆனித்திருவிழா தேரோட்டம் நடத்துவது தொடர்பாக பிரச்னைகள் நிலவி வந்தது. சமரச ஏற்பாடுகள் தொடர்ந்தும் நிறுத்தப்பட்ட தேரோட்டம் மீண்டும் சில ஆண்டுகள் ஓடியது. 2006 ம் ஆண்டு தேரோட்டத்திற்கு பின், தேர் ஓடாமல், சப்பர பவனி மட்டுமே நடந்து வந்தது. 18 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு ஆனி தேரோட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜூன் 21 காலை நடக்க உள்ள தேரோட்ட விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆஷா அஜித், கூடுதல் டி.ஜி.பி., அருண், ஐ.ஜி., கண்ணன், டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி.,க்கள் மதுரை அர்விந்த், சிவகங்கை டோங்க்ரே பிரவீன் உமேஷ் உள்ளிட்டோர் ஆலோசனை செய்தனர். மேலும் தேர், கோயில், தேரோடும் வீதிகளில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது என்பது குறித்தும் கலந்துரையாடினர்.