ADDED : ஜூலை 22, 2024 05:14 AM

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூலை 13 அன்று ஆடி பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி பரங்கி நாற்காலி, பல்லக்கு, குதிரை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார்.
நேற்று மாலை 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வீரஅழகர் எழுந்தருளினார். சிறப்பு அபிேஷகத்திற்கு பின் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன் செய்தனர்.