/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்டதேவி கோயிலில் இன்று காலை தேரோட்டம் கண்டதேவி கோயிலில் இன்று காலை தேரோட்டம்
கண்டதேவி கோயிலில் இன்று காலை தேரோட்டம்
கண்டதேவி கோயிலில் இன்று காலை தேரோட்டம்
கண்டதேவி கோயிலில் இன்று காலை தேரோட்டம்
ADDED : ஜூன் 21, 2024 04:20 AM
தேவகோட்டை: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில்ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாளான இன்று ஆனி கேட்டை நட்சத்திரத்தில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. எப்போதும் மாலை நேரத்தில் தேரோட்டம் நடக்கும்.
இந்தாண்டு காலை 7:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துஉள்ளனர். தேர் சுற்றி வந்து கோயில் எதிரிலுள்ள வழக்கமான இடத்தில் நிலை நிறுத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தேரில் சொர்ண மூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மனை வழிபட வசதியாக மாலை 5:00 மணி வரை சுவாமி, அம்மன் தேரிலேயே வீற்றிருப்பர். பக்தர்கள் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
கண்டதேவிக்குள் செல்பவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர்.