/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்டதேவியில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை கண்டதேவியில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
கண்டதேவியில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
கண்டதேவியில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
கண்டதேவியில் ஜூன் 21ல் தேரோட்டம் கூடுதல் டி.ஜி.பி., ஆலோசனை
ADDED : ஜூன் 19, 2024 06:19 AM

சிவகங்கை, : தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி திருவிழா தேரோட்டத்தில், அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுப்பதென சிவகங்கையில் கூடுதல் டி.ஜி.பி., அருண் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி திருவிழா ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஜூன் 21 ல் தேரோட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும், தேர் வடம் பிடித்து இழுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் டி.ஜி.பி., அருண் தலைமையில் நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, ஐ.ஜி., கண்ணன், டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி.,க்கள் (மதுரை) அர்விந்த், (சிவகங்கை) டோங்க்ரே உமேஷ் பிரவீன், (ராமநாதபுரம்) சந்தீஷ், ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் பழனிக்குமார், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வடம்பிடித்து தேர் இழுப்பது என முடிவு செய்தனர்.
கூடுதல் டி.ஜி.பி., அருண் கூறியதாவது: கண்டதேவி தேரோட்டம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். இதற்காக ஐ.ஜி., தலைமையில் 3 எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் என 2800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, வாகன பரிசோதனை செய்கிறோம். அனைத்து நிகழ்வுகளும் சி.சி.டி.வி., கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.