/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து
மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து
மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து
மத்திய பட்ஜெட் : பொது மக்கள் கருத்து

விவசாயிகளுக்கு எதுவும் இல்லை
எல்.ஆதிமூலம், பொதுச் செயலாளர் முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சிவகங்கை மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு திருப்தியா என்றால் இல்லை. தமிழகத்தில் பேரிடர் வெள்ள காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு இனி எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க பாசன கட்டமைப்புகளை குறிப்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு திட்டமான கோதாவரி - காவிரி -வைகை- குண்டாறு திட்டம் செயல்படுத்துவது முக்கியமானது. பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. விவசாய கடன்களை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என பிரிக்காமல் விவசாயத்திற்கு பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்தாத நிலையில் தள்ளுபடி செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை . விவசாய கூலி தொழிலாளிகளுக்கான வேலை வாய்ப்பு உற்பத்தி துறையிலேயே காய்கறி சாகுபடிக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எண்ணெய் வித்து , தானியங்கள், சிறுதானிய உற்பத்தி இன்னும் பல்வேறு உணவு தானிய உற்பத்தியில் நமது அடைய வேண்டியது உள்ளது. அதற்கான முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பட்ஜெட்டாக இது இல்லை.
ஊழியர் நலனுக்கு எதிரான பட்ஜெட்
பி.கண்ணதாசன், மாவட்ட தலைவர் அரசு ஊழியர் சங்கம், சிவகங்கை
தொழில், பெண், கல்வி வளர்ச்சிக்கானது
ஆர்.ஜெயலட்சுமி, தொழில் முனைவோர், சிவகங்கை
வரிக்கான வருவாய் உயர்வுக்கு வரவேற்பு
ஜி.பர்வதரோகிணி, வரிசெலுத்துவோர் சிவகங்கை
இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு
வே.சுந்தரபாரதி, குடும்பத்தலைவர் சிவகங்கை
நடுத்தர குடும்பத்திற்கான பட்ஜெட்
கே.வெண்ணிலா, பேராசிரியர் அரசு மகளிர் கலை கல்லுாரி சிவகங்கை
பெண்களுக்கான பட்ஜெட்
எஸ்.பி.இளவரசி, ஆடிட்டர், காரைக்குடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை செய்துள்ளார். இதற்கு பெண்கள் மட்டுமின்றி தென்னிந்திய மக்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது, இதனால் தங்கத்தின் விலை ரூ. 4 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளது. ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை வரி கட்ட தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். இது பெண்கள் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பெண் குழந்தைகள், பெண்கள் என சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளனர். நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட் பயனுள்ளதாக இருக்கும்.
தங்கம் வாங்க தங்கமான வாய்ப்பு
ச.ராகதீபா, குடும்பத்தலைவி ராம் நகர், மானாமதுரை
கிராமப்புற விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு
ஆர்.சந்தோஷ்குமார், கடலை எண்ணெய் ஆலை உரிமையாளர், சிங்கம்புணரி வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் வேளாண் துறையை டிஜிட்டல்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளின் பல்வேறு வேலைகளை சுலபமாக்கும். உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்டவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. இதன் மூலம் வானம்பார்த்த பூமி கொண்ட விவசாயிகளும் அதிகம் பயன்பெறக்கூடும். இது சார்ந்த எண்ணெய் ஆலைகள் வளர்ச்சி பெறும், மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் திறக்கப்படும், கிராமப்புறங்களில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு எதுவும் இல்லை
மகபூப்பாட்சா, வர்த்தக சங்க தலைவர், தேவகோட்டை