ADDED : ஜூலை 19, 2024 11:52 PM
மானாமதுரை : மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாமை ராஜகம்பீரத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, ராஜகம்பீரம் ஊராட்சி தலைவர் முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தாசில்தார் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.பி.டி.ஓ.,க்கள் லூயிஸ் ஜோசப் பிரகாஷ், மாலதி,மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பல ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனுக்களாக வழங்கினர். எம்.எல்.ஏ., தமிழரசி பயனாளிகளுக்கு உதவி வழங்கினார்.