மானாமதுரையில் வாழை இலை விலை உயர்வு
மானாமதுரையில் வாழை இலை விலை உயர்வு
மானாமதுரையில் வாழை இலை விலை உயர்வு
ADDED : ஜூன் 11, 2024 11:01 PM
மானாமதுரை : மானாமதுரை,இளையான்குடியில் தொடர் முகூர்த்தம் காரணமாக இலை, வாழை மரம் விலை உயர்ந்துள்ளது.
மானாமதுரை, இளையான்குடியை சுற்றியுள்ள தெ.புதுக்கோட்டை, கோச்சடை,வேலடிமடை, எஸ்.காரைக்குடி, திருச்சி ரமணக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர் தற்போது வைகாசி தொடர் முகூர்த்த நாட்கள் வருவதால் வாழை இலை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது
40 கட்டுகள் கொண்ட 200 வாழை இலை வழக்கம்போல் ரூ.400 லிருந்து ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.800 லிருந்து ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வாழைமரம் ஜோடி ஒன்று ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்த நிலையில் தற்போது ஒரு ஜோடி ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வாழை இலை விவசாயிகள் கூறியதாவது: தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதன் காரணமாகவும் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கோடை மழை பெய்ததாலும், போதுமான அளவில் வாழை இலை கிடைக்காத காரணத்தினால் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் முகூர்த்த நாட்கள் குறைவால் வழக்கம் போல விலை குறையும் வாய்ப்புள்ளது என்றனர்.