ADDED : ஜூன் 25, 2024 11:14 PM
மானாமதுரை: சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தெ.புதுக்கோட்டை எம்.கே.என்.நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். மகளிர் உரிமை துறை அலுவலர்கள் ருவனியா, பவனீஸ்வரி அரசின் புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மகளிர் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை தடுப்பு முறைகள், பாதுகாப்பு முறைகள் பற்றி கூறினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.