ADDED : ஜூன் 30, 2024 04:44 AM
தேவகோட்டை : தேபிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சட்ட தின விழாவை முன்னிட்டு போக்சோ விழிப்புணர்வு கூட்டம் தலைமையாசிரியர் சேவியர்ராஜ் தலைமையில் நடந்தது. வக்கீல் சொர்ணலிங்கம் போக்சோ பற்றி விழிப்புணர்வு செய்திகளை குறிப்பிட்டும், சாலை விதிமுறைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
உதவி தலைமையாசிரியர் எட்வின் ரொசாரியோ, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயசீலன் பங்கேற்றனர்.