ADDED : ஜூலை 29, 2024 10:42 PM
திருப்புத்துார் : திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் மாங்கோடிபி பல்கலை மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து கணினி அறிவியல் மற்றும்பொறியியல் துறை மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது.
இறுதியில் நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் 150க்கும் மேற்பட்ட மாணவ-ர்கள் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றனர்.
இதனை கவுரவிக்கும் விதமாக, மதுரையில் மாங்கோடிபி பல்கலை மற்றும் ஐசிடி அகாடமி, சென்னை இணைந்து நடத்திய அகாடமிக் லீடர்ஸ் கனெக்ட் எனும் நிகழ்ச்சியில் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிக்கு எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மின்னணுமற்றும் தொலைதொடர்புத் துறை தலைவர் மு.தாமோதரன்விருதை பெற்றுக் கொண்டார். இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் ப.பாலமுருகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.