Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கானாடுகாத்தானில் விமான பயிற்சி மையம் * ஆய்வு செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு

கானாடுகாத்தானில் விமான பயிற்சி மையம் * ஆய்வு செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு

கானாடுகாத்தானில் விமான பயிற்சி மையம் * ஆய்வு செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு

கானாடுகாத்தானில் விமான பயிற்சி மையம் * ஆய்வு செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு

ADDED : ஆக 05, 2024 06:52 PM


Google News
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் கால்நடை பண்ணையில் ஆங்கிலேயர் காலத்தில் அமைத்த ஓடுதளத்தில் விமான பயிற்சி மையம் துவக்குவதற்கான சாத்தியகூறுகளை ராணுவ நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

தமிழக தொழில்துறை சார்பில் செயல்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தில், ‛டிட்கோ' மூலம் புனரமைப்பு செய்து, அங்கு விமான பயிற்சி மையம் நிறுவ திட்டமிட்டுள்ளது. தமிழக அளவில் 17 இடங்களில் விமான ஓடுதளம் உள்ளது. அவற்றில் கயத்தாறு, உளுந்துார்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் ஓடுதளம் பயன்பாடின்றி கிடக்கிறது. முதற்கட்டமாக துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் கால்நடை பண்ணைக்குள் உள்ள ஓடுதளத்தில் விமான பயிற்சி மையம் நிறுவுவதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

கானாடுகாத்தானில் உள்ள கால்நடை பண்ணைக்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலத்தில், ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட 1.8 கி.மீ., துாரத்திற்கு தரமான விமான ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளத்தில் விமான பயிற்சி நிறுவனம் அமைக்க ராணுவத்தின் மூலம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

* ஆய்வுக்கு ராணுவ அதிகாரிகள் முடிவு:

அதிகாரிகள் கூறியதாவது: விமான ஓடுதளம் 1.8 கி.மீ., துாரம் உள்ளது. இந்த ஓடுதளத்தின் இரு புறமும் தலா 10 ஏக்கர் வீதம், 20 ஏக்கர் நிலம் செட்டிநாடு கால்நடை பண்ணையிடம் இருந்து பெறப்படும். ராணுவ அதிகாரிகள் ‛ட்ரோன் கேமரா' மூலம் ஆய்வு செய்ய, கலெக்டர் ஆஷா அஜித்திடம் அனுமதி கேட்டுள்ளனர். விரைவில் இந்திய ராணுவ அதிகாரிகள் ஓடுதளத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பர். பின்னர் ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் விமான பயிற்சி மையம் செயல்படும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us