Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆரம்ப சுகாதார நிலையங்களில்  தற்காலிக பணிக்கு விண்ணப்பம்  சுகாதார அலுவலர் தகவல் 

ஆரம்ப சுகாதார நிலையங்களில்  தற்காலிக பணிக்கு விண்ணப்பம்  சுகாதார அலுவலர் தகவல் 

ஆரம்ப சுகாதார நிலையங்களில்  தற்காலிக பணிக்கு விண்ணப்பம்  சுகாதார அலுவலர் தகவல் 

ஆரம்ப சுகாதார நிலையங்களில்  தற்காலிக பணிக்கு விண்ணப்பம்  சுகாதார அலுவலர் தகவல் 

ADDED : மார் 15, 2025 05:25 AM


Google News
சிவகங்கை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட தற்காலிக பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என மாவட்ட சுகாதார அலுவலர் எஸ்.மீனாட்சி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, மறவமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநர், இயன்முறை சிகிச்சையாளர், பல் மருத்துவ உதவியாளர் தலா ஒரு பதவிக்கும், புதுவயல் அருகே களத்துார் துணை சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர் தலா ஒரு காலிப்பணியிடமும், நெற்குப்பை, சாலைக்கிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் 2 கவுன்சிலர் காலிபணியிடங்களை பூர்த்தி செய்யவதற்கான விண்ணப்பம் மார்ச் 24 வரை வரவேற்கப்படுகிறது.

இது முற்றிலும் தற்காலிக பணியிடம் மட்டுமே. இதற்கான விண்ணப்பம், அறிவிப்பு விபரங்களை http:/sivaganga.nic.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மார்ச் 24 அன்று மாலைக்குள் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களை 04575- - 240 524ல் அறியலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us