/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துாரில் ஜூலை 12 ல் ஆனி திருமஞ்சனம் திருப்புத்துாரில் ஜூலை 12 ல் ஆனி திருமஞ்சனம்
திருப்புத்துாரில் ஜூலை 12 ல் ஆனி திருமஞ்சனம்
திருப்புத்துாரில் ஜூலை 12 ல் ஆனி திருமஞ்சனம்
திருப்புத்துாரில் ஜூலை 12 ல் ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 10, 2024 05:52 AM
திருப்புத்துார், : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஜூலை 12ல் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெறுகிறது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இறைவன் இறைவிக்காக ஆடல் பெற்ற தலமாகும். இக்கோயிலில் நடராஜருக்கு தனி சன்னதி இசை துாண்கள் நிறைந்த மேடையுடன் அமைந்துள்ளது. சிவாலயங்களில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேக விழாக்களில் ஆனி திருமஞ்சனம் மற்றும் திருவாதிரை சிறப்பானது. இவ்விரண்டும் இக்கோயிலில் நடைபெறுகிறது.
ஜூலை 12ல் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு உற்ஸவ நடராஜர் மூலவர் சன்னதி எழுந்தருள்கிறார். தொடர்ந்து அபிஷேக, ஆராதனை நடைபெறும். அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.சுவாமி பிரகார வலம் வருதல் நடைபெறும்.