/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டெண்டர் விட்டும் கட்டப்படாத அங்கன்வாடி மையம் டெண்டர் விட்டும் கட்டப்படாத அங்கன்வாடி மையம்
டெண்டர் விட்டும் கட்டப்படாத அங்கன்வாடி மையம்
டெண்டர் விட்டும் கட்டப்படாத அங்கன்வாடி மையம்
டெண்டர் விட்டும் கட்டப்படாத அங்கன்வாடி மையம்
ADDED : ஜூலை 07, 2024 11:30 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் டெண்டர் விடப்பட்டு ஒரு வருடத்தை கடந்தும் அங்கன்வாடி மையக் கட்டட பணி துவங்காததால் பெற்றோர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இப்பேரூராட்சியில் 18 வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் அங்கன்வாடி மையம் பழுதடைந்த நிலையில் ஆபத்தாக விளங்கியது.
பெற்றோர்களின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து அக்கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.
புதிய கட்டடம் கட்ட ரூ. 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. டெண்டர் விடப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இதுவரை கட்டுமானப் பணிகள் துவங்கவில்லை. தொடர்ந்து வாடகை கட்டடத்தில் மையம் செயல்படுகிறது. கட்டுமான பணிகளை துவக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.