ADDED : ஜூன் 19, 2024 05:08 AM
காரைக்குடி ; காரைக்குடியில் ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிற்சங்க பேரவை கூட்டம் நடந்தது.
நகர் தலைவர் முத்தையா ராமு தலைமை வகித்தார். துணை தலைவர் கருப்பையா, அமானுல்லா முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் (உள்ளாட்சி) பி.எல்., ராமசந்திரன், ஆட்டோ சங்க மாநில துணை தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் சகாயம், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா பங்கேற்றனர். வாகன எப்.சி., கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 7 ல் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது என தீர்மானித்தனர்.