ADDED : ஜூன் 08, 2024 05:31 AM
திருப்புவனம் : திருப்புவனம் வட்டார தனியார் பள்ளிகளில் தற்போதைய கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தேர்வுகளை பயமின்றி எழுதுவது எப்படி, தேர்வுக்கு தயாராவது எப்படி, வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் பள்ளிகளில் பள்ளிகள் தொடங்குவதற்கு முன் நடத்தப்படுகிறது.
திருப்புவனம் அருகே மணலுார் தனியார் பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாணவர்கள்,பெற்றோர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் யோகாலெட்சுமி கூறுகையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு பயம் சிறிது இருக்கும். தேர்வு குறித்த பயத்தை அகற்றவும் கற்பிக்கப்படும் பாடங்கள் குறித்தும், ஆலோசனை வழங்கப்படுவதுடன் பெற்றோர்களின் கருத்துகளும் கேட்கப்படுகிறது.
மாணவ, மாணவியர்களின் நடவடிக்கை குறித்து பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் வந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.