/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஒக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்துவதால் விபத்து ஒக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்துவதால் விபத்து
ஒக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்துவதால் விபத்து
ஒக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்துவதால் விபத்து
ஒக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்துவதால் விபத்து
ADDED : ஜூலை 19, 2024 06:17 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூரில் தேசிய நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால், விபத்து அதிகரிக்கும் நிலை உள்ளது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் கட்டியுள்ளனர். தஞ்சாவூர் - பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், தஞ்சாவூர், காரைக்குடி போன்ற பகுதியில் இருந்து ஒக்கூர், சிவகங்கை வழியாக ராமேஸ்வரம், மானாமதுரைக்கு அதிகளவில் பஸ்கள் சென்று வருகின்றன. இது தவிர சுற்றுலா பயணிகள் வாகனமும் அதிகளவில் இந்த ரோட்டில் செல்கின்றன. இந்த ரோடு எந்த நேரமும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இந்நிலையில், ஒக்கூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் மெயின் ரோட்டில் உள்ள தேசிய வங்கிக்கு தினமும் வருகின்றனர். இவர்கள் தவிர வேலை உறுதி திட்டம், மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவிதொகை உள்ளிட்ட உதவி தொகைகளை வங்கியில் எடுப்பதற்காக வாகனங்களில் வருகின்றனர். இவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடமில்லை. இதனால், தேசிய வங்கிக்கு முன் தஞ்சாவூர் - பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையிலேயே ரோட்டை மறித்து டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர். அதே போன்று பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
போலீஸ் நடவடிக்கை அவசியம்
வங்கி அதிகாரி கூறியதாவது: வங்கிக்கு வரும் வாகனங்களை நிறுத்த, வங்கி அருகில் காலியிடம் உள்ளது. ஆனால், பொதுமக்கள் ரோட்டிலேயே நிறுத்திவிட்டு வங்கிக்குள் வருகின்றனர். இது குறித்து பலமுறை அவர்களிடம் தெரிவித்தும் கேட்பதில்லை. இது குறித்து போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.