/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரயில்வே கேட்டில் பரப்பிய ஜல்லிக்கற்களால் விபத்து ரயில்வே கேட்டில் பரப்பிய ஜல்லிக்கற்களால் விபத்து
ரயில்வே கேட்டில் பரப்பிய ஜல்லிக்கற்களால் விபத்து
ரயில்வே கேட்டில் பரப்பிய ஜல்லிக்கற்களால் விபத்து
ரயில்வே கேட்டில் பரப்பிய ஜல்லிக்கற்களால் விபத்து
ADDED : ஜூன் 16, 2024 05:03 AM

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே கேட்டில் ஜல்லிக்கற்களை பரப்பி சரி செய்யாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையிலிருந்து மதுரை செல்லும் ரயில்வே லைனில் பைபாஸ் ரயில்வே கேட் அமைந்துள்ளது.இந்த ரயில்வே கேட் வழியாக மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சிவகங்கை,மதுரை, இளையான்குடி,தாயமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மானாமதுரை கீழ்கரை பகுதியிலிருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் இந்த ரயில்வே கேட்டை கடந்து மேல்கரைக்கு செல்கின்றனர்.
3 நாட்களுக்கும்மேலாக ரயில்வே கேட் பகுதியில் ஜல்லிக்கற்களை பரப்பி அப்படியே விடப்பட்டுள்ளதால் மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.