ADDED : ஜூன் 11, 2024 07:29 AM
சிவகங்கை : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சிவகங்கை வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை பதிவு மற்றும் ஆதார் புதுப்பித்தல் பணி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக ஆக்ஸ்போர்டு பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஆதார் முகாம் நடந்தது.
சிவகங்கை நகராட்சி தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்மாரிமுத்து முன்னிலை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாலாமணி, இந்திராணி, வளர்மதி ஞானகிரேஸ், பள்ளி முதல்வர் குமாரி பிரனேஷ் கலந்துகொண்டனர்.
சிவகங்கை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரூபாராணி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.