/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவர்
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவர்
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவர்
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவர்
ADDED : ஜூன் 21, 2024 04:29 AM

சிவகங்கை: ஜம்மு காஷ்மீரில் 4வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோ மோஷன் நேஷனல் சாம்பியன் ஷிப் போட்டி 3 நாட்கள் நடந்தது.
இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம்,பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தமிழகம்சார்பில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டம் அருணேஸ்வரன் தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் கோவை கற்பகம் கலைக் கல்லுாரியில் படித்து வருகிறார். சிவகங்கை வந்த இவரை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.