ADDED : ஜூன் 20, 2024 04:48 AM

காரைக்குடி: காரைக்குடியில் தேவகோட்டை ரஸ்தா பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை சேதமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு வரும் முக்கிய சாலையாக எஸ்.ஆர்.எம்., சாலை உள்ளது. ஒருவழிச்சாலையான இச்சாலை பல வருடங் களாக முற்றிலும் சேதமடைந்து பயணத்திற்கு பயனற்ற நிலையில் இருந்தது.
சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் இச்சாலை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று நகராட்சியும், நகராட்சிக்கு சொந்தமானது என்று நெடுஞ்சாலை துறையும் தெரிவிப்பதாக மக்கள் புகார் கூறினர்.
இந்நிலையில் தற்போது நகராட்சி சார்பில் 250 மீ., தூரத்திற்கு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும்பணி நடந்து வருகிறது.