/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 90 வயதான நெற்குப்பை பேரூராட்சி ; பத்திரப்பதிவு, சந்தை பஸ் ஸ்டாண்ட் வருமா 90 வயதான நெற்குப்பை பேரூராட்சி ; பத்திரப்பதிவு, சந்தை பஸ் ஸ்டாண்ட் வருமா
90 வயதான நெற்குப்பை பேரூராட்சி ; பத்திரப்பதிவு, சந்தை பஸ் ஸ்டாண்ட் வருமா
90 வயதான நெற்குப்பை பேரூராட்சி ; பத்திரப்பதிவு, சந்தை பஸ் ஸ்டாண்ட் வருமா
90 வயதான நெற்குப்பை பேரூராட்சி ; பத்திரப்பதிவு, சந்தை பஸ் ஸ்டாண்ட் வருமா

பஸ் ஸ்டாண்ட் இல்லாத பேரூராட்சி
நெற்குப்பை நகரைச் சுற்றிலும் 30 கிராம மக்கள் வசிக்கின்றனர். நெற்குப்பையில் அடிப்படை வசதிகள் அதிகரித்தால், அரசு அலுவலகங்கள் துவக்கப்பட்டால் சுற்றுப்புறக் கிராமத்தினருக்கும் அதன் பலன் சேரும். நெற்குப்பையில் நீண்டகாலமாக பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரி வருகின்றனர்.
பத்திரப்பதிவுக்கு அலைச்சல்
சுற்றிலும் கிராமத்தினர் தோட்ட விவசாயிகளாக உள்ளனர். நெற்குப்பையில் உழவர் சந்தை துவக்கினால் நகர் மக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைப்பதுடன், விவசாயிகளும் பலனடைவர். நெற்குப்பை மற்றும் சுற்றுப்புற 30 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு அலுவலக நடைமுறைகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு சென்று வருகின்றனர். பத்திரப்பதிவிற்கான வருவாய் சான்றிதழ் அனைத்திற்கும் திருப்புத்துார் வந்து செல்ல வேண்டியுள்ளதால் கால விரயத்துடன் பணமும் விரயமாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனை தரம் உயர்த்தல்
மருத்துவ வசதிக்கு நெற்குப்பை ஆரம்பசுகாதார நிலையத்தில் போதிய படுக்கை வசதி இல்லை. சிகிச்சைக்கு பொன்னமராவதி அல்லது 20 கி.மீ. தொலைவிலுள்ள திருப்புத்துாருக்கு செல்ல வேண்டியுள்ளது .சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த இப்பகுதியினர் கோரியுள்ளனர்.