/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 7 ஆண்டு சிறை சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 04, 2024 02:39 AM

சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் 41. கொத்தனார் வேலை செய்து வருகிறார். 2000 செப்.29 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த பெண் திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பாலமுருகன் அவரது தந்தை பெரியசாமி 70, தாயார் முத்துப்பிள்ளை 60 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. பாலமுருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.
பாலமுருகனின் பெற்றோர் விடுவிக்கப்பட்டனர்.