/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை சந்தையில் தக்காளி கிலோ ரூ.50 சிவகங்கை சந்தையில் தக்காளி கிலோ ரூ.50
சிவகங்கை சந்தையில் தக்காளி கிலோ ரூ.50
சிவகங்கை சந்தையில் தக்காளி கிலோ ரூ.50
சிவகங்கை சந்தையில் தக்காளி கிலோ ரூ.50
ADDED : ஜூலை 25, 2024 04:33 AM

சிவகங்கை: சிவகங்கையில் நேற்றைய வாரச்சந்தையில் தக்காளி விலை சரிவை சந்தித்ததால் பெண்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
சிவகங்கை, வாரச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி துவக்கத்தில் வரத்து குறைவால் முக்கியமான காய்கறிகளின் விலையில் சற்று ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக சாம்பார், சட்னி, ரசம் என அனைத்தும் தயாரிக்க பயன்படும் தக்காளி கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்றது.
நேற்றைய சந்தையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவை சந்தித்தது. தக்காளி கிலோ ரூ.50 ஆக குறைந்து விட்டது. பெண்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
தக்காளி கிலோ ரூ.50, பெரிய வெங்காயம் - 50, சின்ன வெங்காயம் - 50, உருளை- 50, சோயா பீன்ஸ் - 230, பட்டர் பீன்ஸ் - 250, பீன்ஸ் - 100, அவரை - 120, பீட்ரூட் - 60, முட்டை கோஸ் - 60, முள்ளங்கி - 40, கத்தரி - 80, சவ்சவ் - 40, சுரைக்காய் - 20, புடலை - 40, கேரட் - 120, பாகற்காய் - 80, வெண்டைக்காய் - 40, முபில் பீன்ஸ் - 100 என விற்றது.