ADDED : ஜூலை 10, 2024 06:54 AM

திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் - கண்டரமாணிக்கம் ரோட்டில் மருதம் பிள்ளையார் கோயில் அருகில் திருக்கோஷ்டியூர் எஸ்.ஐ. சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சோதனை செய்தனர். அப்பகுதியில் சிலர் சாக்குப் பையில் மணலை அள்ளி மினி லாரியில் ஏற்றியது தெரிந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து மினி லாரியை கைப்பற்றினர். விசாரணையில் மணக்குடி அன்பழகன் 55, நயினார்பட்டி கருப்பையா 45, மதிவாணன் மூவரும் அனுமதியின்றி மணல் எடுத்தது தெரிய வந்தது.