/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மிளகாய் பொடி துாவி ரூ.2.67 லட்சம் கொள்ளை மிளகாய் பொடி துாவி ரூ.2.67 லட்சம் கொள்ளை
மிளகாய் பொடி துாவி ரூ.2.67 லட்சம் கொள்ளை
மிளகாய் பொடி துாவி ரூ.2.67 லட்சம் கொள்ளை
மிளகாய் பொடி துாவி ரூ.2.67 லட்சம் கொள்ளை
ADDED : ஜூன் 14, 2024 04:54 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் மிளகாய் பொடி துாவி ரூ.2.67 லட்சம் கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இளையான்குடி அருகே விஜயன்குடியை சேர்ந்தவர் முருகானந்தம் 50, முள்ளியரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் 46. இருவரும் மறவமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிகின்றனர். இருவரும் நேற்று மதியம் 2:00 மணிக்கு கடையில் இருந்து ரூ. 2 லட்சத்து 67 ஆயிரத்தை வங்கியில் கட்ட பணத்துடன் டூவீலரில் சென்றனர். எதிரில் டூவீலரில் வந்த இரண்டு பேர் அவர்களை மறித்து தினகரன் மீது மிளகாய் பொடியை துாவி அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் பணத்தையும் அலைபேசியையும் பறித்து சென்றனர். காளையார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.