ADDED : ஜூலை 08, 2024 06:58 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே பாலத்தின் கீழே பதுக்கி வைத்திருந்த 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி அருகே பாதரக்குடி திருச்சி -- ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் குன்றக்குடி எஸ்.ஐ., பிரேம் ரோந்து சென்று கொண்டிருந்தார். பைக்கில் நின்ற சிலர் அவரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். சந்தேகமடைந்த எஸ்.ஐ., பைக்கை சோதனை செய்து அங்கிருந்த பாலத்தின் கீழே சென்று சோதனையிட்டார். அங்கு 120 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர்கள் யார், எங்கிருந்து கஞ்சா வந்தது என விசாரிக்கின்றனர்.