/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி
மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி
மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி
மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி
ADDED : ஜூன் 15, 2024 06:48 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரில் மின்பராமரிப்பு பணியில் இருந்த தற்காலிக பணியாளர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் துணை மின்நிலையம் உள்ளிட்ட மின் விநியோகப் பகுதிகளில் நேற்று பராமரிப்பு பணி நடந்ததால் நேற்று காலை முதல் மின்தடை அமலில் இருந்தது. இந்நிலையில் மின்துறை அலுவலகம் எதிரில் உள்ள கிருஷ்ணப்ப அய்யனார் கோயில் பின்புறம் தற்காலிக பணியாளர்கள் ஆறு பேர் பராமரிப்பு பணியில் இருந்தனர். மாலை 5:00 மணி அளவில் ஆறு பேரில் ஒருவரான எஸ்.செவல்பட்டியைச் சேர்ந்த கோடாங்கி மகன் கண்ணன்23, என்பவர் மின் கம்பத்தில் ஏறி உயரத்தில் இருந்தவாறே வயரை இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டதால், அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.