/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காங்., தலைவர் பேச்சுக்கு சிவகங்கை கார்த்தி ஆதரவு காங்., தலைவர் பேச்சுக்கு சிவகங்கை கார்த்தி ஆதரவு
காங்., தலைவர் பேச்சுக்கு சிவகங்கை கார்த்தி ஆதரவு
காங்., தலைவர் பேச்சுக்கு சிவகங்கை கார்த்தி ஆதரவு
காங்., தலைவர் பேச்சுக்கு சிவகங்கை கார்த்தி ஆதரவு
ADDED : ஜூன் 14, 2024 05:00 AM
தேவகோட்டை: கட்சியை வலுப்படுத்த தலைவர்கள் நிர்வாகிகளிடம் பேசுவது இயல்பு தான் என சிவகங்கை கார்த்தி எம்.பி. கூறினார்.
சிவகங்கை எம்.பி., கார்த்தி தேவகோட்டையில் கூறியதாவது: உலகில் இந்தியா மக்கள் தொகையில் பெரிய நாடு. எனவே பொருளாதார வளர்ச்சி கூடத்தான் செய்யும். மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் உற்பத்தி அதிகரிக்கும். எனவே பொருளாதார வளர்ச்சி கூடும். பா.ஜ. வின் திறமையாலோ, நிர்வாகத்தாலோ வளர்ச்சி கூடவில்லை.
பா.ஜ. கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் கட்சியும், சந்திரபாபு நாயுடு கட்சியும் ஏற்கனவே கசப்பான அனுபவம் ஏற்பட்டு வெளியே வந்த கட்சிகள் தான். மீண்டும் கசப்பான அனுபவம் ஏற்படுவது பா.ஜ. ஆட்சியின் நடத்தையை பொறுத்து தான் உள்ளது.
மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசியது தங்களது கட்சியை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பேசுவது இயல்பான விஷயம் தான் என்றார்.