ADDED : ஜூலை 13, 2024 05:16 AM
பூலாங்குறிச்சி : பூலாங்குறிச்சியில் வ.செ.சிவ அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் ஆனந்தி தலைமை வகித்தார். மேனாள் முதல்வர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். முகாமில் பள்ளி கல்வி, கல்லுாரி கல்விக்கு இடையிலான வேறுபாடு, மாணவர்களிடையே நல்லுறவு, கல்லுாரி வளாக நடைமுறைகள், எதிர்கால திட்டங்கள், பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது.
துறைவாரியாக பேராசிரியர்கள் பாடத்திட்டங்கள், பருவத் தேர்வு முறை குறித்தும், தொடர்பு மொழி பயிற்சி அளித்தனர்.