/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது
5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது
5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது
5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது
ADDED : ஜூன் 03, 2025 01:15 AM
சேலம், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் காரிப்பட்டி, செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர், தனது வீட்டின் எதிர்ப்பை மீறி, 2016 ல், இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். குணசேகரனின் அண்ணன் ராஜசேகரன், 35, பெண் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரப்பட்ட பெண் வீட்டார், ராஜசேகரனை கொலை செய்தனர்.
இந்த வழக்கில், மின்னாம்பள்ளியை சேர்ந்த பிரபாகரன், 37, உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியில் வந்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பிரபாகரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார்.
அவரை பிடிக்க நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. காரிப்பட்டி போலீசார், பிரபாகரனை தேடி வந்த நிலையில், பெருந்துறையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.