/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை
பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை
பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை
பணமோசடியில் ஈடுபட்ட வாலிபர் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை
ADDED : ஜூன் 27, 2025 01:25 AM
ஓமலுார், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையை சேர்ந்தவர் சரணவன், 39. இவர் நண்பருடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தை தொடங்கி, பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டார். இதனால் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம், டேனிஷ்பேட்டையில் உள்ள சரவணன் வீட்டை முற்றுகையிட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அனுப்பி வைத்தனர்.