போலீசை தாக்கிய வாலிபர் சிக்கினார்
போலீசை தாக்கிய வாலிபர் சிக்கினார்
போலீசை தாக்கிய வாலிபர் சிக்கினார்
ADDED : செப் 23, 2025 01:54 AM
வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த வெள்ளாள குண்டத்தை சேர்ந்த பிருந்தா என்பவரிடம், அவரது உறவினர் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த பாஸ்கர், 45, என்பவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். புகார்படி விசாரிப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் தலைமை காவலர் சசிகுமார் சென்றுள்ளார்.
அப்போது சசிகுமாரை, பாஸ்கர் தகாத வார்த்தையால் திட்டி, அருகில் இருந்த கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் போலீஸ் சீருடையை பிடித்து இழுத்துள்ளார். காயமடைந்த சசிகுமார் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து, வாழப்பாடி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து, பாஸ்கரை கைது செய்தனர்.